மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் 25593 கொரனா பரிசோதனைகள் 712 தொற்றுக்கள்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூடத்தில் இதுவரை 25593 கொரனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் நவம்பர் 30 திகதிவரையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கையே இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 712 கொரனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் பெறப்பட்ட மாதிரிகளே மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

போதனாவைத்தியசாலை பணிப்பாளரின் வழிகாட்டுதலில் நுண்ணுரியல் விசேட வைத்தியநிபுணர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் அவர்களின் மேற்பார்வையில்   போதனாவைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களினால் இப்பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாதகும்.