கிழக்கு மாகாணத்தில் இன்று 43புதிய  தொற்றுக்கள்.அக்கரைப்பற்று109ஆக உயர்வு.

கிழக்கு மாகாணத்தில் இன்று 43புதிய  கொரனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இன்றைய புதிய தொற்றில்  அக்கரைப்பற்றில் 32பேரும், அட்டாளச்சேனையில் 06பேரும் ,ஆலையடிவேம்பில் ஒருவரும், வாழைச்சேனையில் 04பேரும் இனம் காணப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று சந்தை உப கொத்தணியில் இதுவரை109 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதுவரை கிழக்குமாகாணத்தில் பெலியகொட கொத்தணி ஊடாக 257பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியாக திருகோணமலை 16 , மட்டக்களப்பு 92,  அம்பாறை பிராந்தியம் 11, கல்முனைபிராந்தியம் 138 என தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.