கல்லடி தனிமைப்படுத்தல் மையத்தில் 04 பேருக்கு கொரனா தொற்று.

மட்டக்களப்பு கல்லடிப்பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட அன்ரிகென் கொவிட் பரிசோதனையில் 04பேர் கொரனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

89பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே 04பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட நான்குபேரும் ஒரே அறையில் வசித்துவந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

அதேவேளை கல்லடி கடற்படை முகாமில் 58பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கிழக்கில் சூறாவளி அச்சம் நிலவுதால் கடற்படையினரின் சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும்பொருட்டு அவர்களை பணியில் ஈடுபடுத்தவே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இப்பரிசோதனைகள் அனைத்தும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.