கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளை 2 ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதிவரை விடுமுறை

பொன்ஆனந்தம்

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளை 2 ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கியுள்ளதாக  கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இன்று செவ்வாய்க்கிழமை (1) அறித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக மாறி கிழக்கு திருகோணமலை ஊடாக ஊடறுத்துச் செல்லவுள்ளது,என வழிமண்டலத்திணைக்களம் கண்டறிந்துள்ளது.

இதனால் பாதிப்புக்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2ம் திகதி தொடக்கம் 4 திகதி வரை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து பாடசாலைகளுளையும் விடுமுறை வழங்குமாறு கல்வி செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர்களும் அனர்த்த முகாமைத்துவ ம் தொடர்பான கூட்டங்களை நடாத்தி அர்த்தங்கள் ஏற்படும் இடத்து எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை ஆராய்நது பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. இதேவேளை திருகோணமலை யில் இன்று காலை 10.00மணியளவில் ஆரம்பமான மழை தொடர்ந்து பெய்த வண்ணமிருந்தன.