கிண்ணியா நகர சபையின் பட்ஜட் நிறைவேற்றம்

ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியா நகர சபையின் பட்ஜட் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த நகர சபையின் சபை அமர்வானது (30) நகர சபையின் விசேட சபை ஒன்று கூடல் மண்டபத்தில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம் பெற்றது.
இதில் பட்ஜட் வாக்கெடுப்பில் ஆதரவாக எட்டு உறுப்பினர்களும், எதிராக மூன்று உறுப்பினர்களும் என்ற விகிதத்தில் வாக்களிப்பு இடம் பெற்றிருந்த போதிலும் சபைக்கு இரு உறுப்பினர்கள் சமூகம் தரவில்லை .குறித்த பட்ஜட் வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளுடன் பட்ஜட் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.