அமைச்சரவை கூட்டமும் ZOOM ஊடாக

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ZOOM  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ இன்று (30) நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து மாலை 6 மணிக்கு தொடங்கியுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள் என்பது அறியப்படுகிறது.

கொரோனா வைரஸை அடிப்படையாகக் கொண்ட கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதே இதற்குக் காரணம் என்று அறியப்படுகிறது.