அக்கரைபற்று பொலிஸ் பிரிவு கண்டிப்பான சுகாதார பாதுகாப்பான வலயமாக பிரகடனம்.கிழக்கு ஆளுநர்.

ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இந்த தருணத்திலிருந்து அக்கரைபற்று பொலிஸ் பிரிவை கண்டிப்பான சுகாதார பாதுகாப்பான வலயமாக நியமித்துள்ளார்.
சுகாதார மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை பின்பற்றுவது குறித்து வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளுமாறு மாகாண அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
அக்கரைபற்று பகுதியில் இருந்து பதிவான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இந்த நடவடிக்கைகள் எடுக்க வழிவகுத்தது. இதுவரை 58 கொரோனா நோயாளிகள் இப்பகுதியிலிருந்தும், 86 நோயாளிகள் கல்முனை பகுதியிலிருந்தும் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாஹரன் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அக்கரைபற்று  பொலீஸ் பகுதியில் உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் ஆளுநர் மக்களை வேண்டிக்கொள்கிறார். ரோந்து சேவை  வாகனங்கள் மூலம் இப்பகுதிக்கு உணவு மற்றும் பானங்களை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.