காட்டு யானை தாக்குதலால் உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஈச்ச நகர் கிராமத்தில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானை தங்களது குடியிருப்பு பகுதி உட்பட பல உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக வீட்டு உரிமையாளர் கவலை தெரிவிக்கிறார்.
குறித்த காட்டு யானை தாக்குதலானது நேற்று (27) இரவு நண்பகல் 1 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானையினால் தனது மலசலகூட குழி மற்றும் வாழை, பலா, தென்னை உட்பட பல பயிர்களை துவம்சம் செய்து விட்டு சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் .குடியிருப்பு பகுதியில் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் இருந்தே பாதுகாப்பற்ற சேதப்படுத்தப்பட்ட யானை வேலியினையும் தாண்டி வருவதாகவும் இதனால் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அதேவேலை தங்களது பாடசாலை செல்லும் பிள்ளைகளின் மன நிலையில் பயம் ஏற்பட்டு வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். பயிர்களை நாசபடுத்துவது மட்டுமல்லாது தினமும் அச்ச சூழ் நிலையுடன் தூங்க வேண்டியுள்ளதாகவும் காலங்களை கழிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து யானையின் தாக்குதலில் இருந்தும் முறையான பாதுகாப்பான யானை வேலிகளை அமைக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.