அக்கரைப்பற்று சந்தையுள்ள கடைஉரிமையாளர்களுக்கு PCR பரிசோதனை

பைஷல் இஸ்மாயில் –
அக்கரைப்பற்று சந்தையுள்ள கடை உரிமையாளர்களுக்கு PCR  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த பிசிஆர் பரிசோதனை மேற் கொள்வதற்கான நடவடிக்கையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர் உள்ளிட்ட வைத்தியர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றில் இருந்து (26) மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என கிழக்கு மாகாண சுகாதரா பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.