கிழக்கில் கொரனா சட்டவிதிமுறைகளைமீறுவோர்மீது உடனடி சட்டநடவடிக்கை.பணிப்பாளரின் கண்டிப்பான உத்தரவு

(வேதாந்தி)

கிழக்கு மாகாணத்தில் வேகமாக கொரனா தொற்றுபரவியுள்ளதால் எதுவித பாகுபாடுமின்றி சட்டநடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கிழக்குமாகாண சுகாதாரப்பணிப்பாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.

சமுக இடைவெளி பேனாமை, முக்க்கவசம் அணியாமை, பலர்ஒன்றுகூடுதல் போன்ற நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படவுள்ளன.

இதேவேளை அக்கரைப்பற்று சுகாதாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 50பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், காத்தான்குடியில் தொற்றுள்ளான பெண் கர்ப்பிணி தாய் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.