மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றல் நீதிமன்ற தீர்ப்பு நாளை

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் நாளை மறுதினம் கார்திகை 27 ம் திகதி விளக்கேற்றுவதற்குமட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சிதலைவருமான பா.அரியநேத்திரனுக்கு எதிராக கொக்கட்டிச்சோலை பொலிசாரால் மட்டக்களப்பு நீதிவான்நீதிமன்றத்தால்வழங்கப்பட்ட தடைஉத்தரவை மீளப்பெறும்படி நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று (24.11.2020) இடம்பெற்றபோது பா.அரியநேத்திரன் சார்பாகசட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன் பிறேமநாத் உள்ளிட்ட 27 சட்டத்தணிகள் வாதிட்டனர்.

மு.ப. 11இமணி தொடக்கம் 11.20 வரை வாதிட்டனர் கொக்கட்டிச்சோலை பொலிஷ்நிலையத்தின்பொலிஷ்உத்தியோகத்தர் திருப்தியான பதில் வழங்காமையால் பொலிஷ்நிலைய பொறுப்பதிகாரியைஉடன்வரவளைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் வழக்கு தற்காலிகமாக பிற்பகல் வரை ஒத்திவைத்து மீண்டும் கொக்கட்டிச்சோலைபொலிஷ்நிலைய்பொறுப்பதிகாரி மன்றுக்கு வருகைதந்தபின் மதியபோசன இடைவெளிக்குப்பின் மீண்டும் கூடியமன்று பி.ப 2 மணிக்கு மீண்டும் மாவடி முன்மாரி துயிலும் இல்லம் விடயம் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது கருத்துக்கூறிய கொக்கட்டிச்சோலை பொலிஷ்நிலையபொறுப்பதிகாரிதடைசெய்யப்பட்டபயங்கரவாதஅமைப்பான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை அடக்கம் செய்த இடமேமாவடிமுன்மாரி சேமக்காலை எனவும் அந்த இடத்தில் அவரகளுக்கு விளக்கேற்றல் செய்வது மீண்டும்விடுதலைப்புலிகளை உருவாக்க கூடிய ஏதுநிலை தோன்றும் எனவும் இவ்வாறான இறந்த புலி உறுப்பினர்களைநினைவு கூறுவது தொடர்பாக மறைமுகமாக சிலர் பின்னணியில் உள்ளதாக தமக்கு புலனாய்வு தகவல்கள்உள்ளதாகவும் இதுபோன்றே யாழ்மாவட்டத்திலும் விளக்கேற்றல் தொடர்பாக அங்கும் தடை விதித்தவிடயங்களை சுட்டிக்காட்டினார்.

அதன்பின் இதன் தீர்ப்பு எதிர்வரும் 27இம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என நீதிபதி கூறியபோது அதனைமறுதலித்த சட்டத்தரணி பிறேமநாத் 26இம் தித்தி இதன் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என மீண்டும் கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான் நாளை (26.11.2020) இதற்கான தீர்ப்பு வழங்கப்படும் என கட்டளை இட்டார்.

இந்த தீர்ப்பை பொறுத்தே மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கார்த்திகை 27இல் விளக்கேற்றல் சம்மந்தமாகமுடிவை எடுக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.