தேடுவாரற்ற நிலையில் விரயமாகும் குழாய் நீர்

ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்கு உட்பட்ட சிராஜ் நகரில் குழாய் நீர் உடைந்த நிலையில் நீர் விரயமாகுவதை அவதானிக்க முடிகிறது.

குறித்த குழாய் நீரானது சிராஜ் நகர் பாடசாலை வீதியில் உள்ள தம்பலகாமம் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வடிகான் ஊடாக செல்லும் குழாய் நீரே இவ்வாறு உடைந்து நீர் வீண்விரயமாகிக் கொண்டிருக்கிறது. சுமார் இருவாரங்களுக்கு மேலாக இவ்வாறு நீர் வீண்விரயமாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் குழாய் நீர் விரயமாகிக் கொண்டிருப்பதை தடுக்க உரியவர்கள் நடவடிக்கை எடுப்பது அவர்களின் பொறுப்பல்லவா??