கல்முனை பற்றிமாவில் கொரோனா தடுப்புமருந்து விசிறல்.

(காரைதீவு  நிருபர் சகா)

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் கொரோனாத் தடுப்பு மருந்து  விசிறப்பட்டது.

கல்லூரி அதிபர் வண.சகோ.செபமாலை சந்தியாகு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக பாடசாலையின் பழையமாணவரும்  பெற்றாருமான த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

கல்முனை மாநகரசபை தலைமை சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் காரியப்பரின் முன்னிலையில் மாநகரசபை  ஊழியர்கள்  பாடசாலை பூராக தொற்றுநீக்கி மருந்தை விசிறினர். ஆண்கள் பெண்கள் வளாகம் அனைத்திற்கும் பலமணிநேரம் இந்த விசிறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அச்சமயம் அதிபர் டாக்டர் உறுப்பினர் ராஜன் உள்ளிட்டோர் சமுகமளித்திருந்தனர்.

மேலும் இங்கு டெங்கு நோய்தடுப்பு மருந்து விசிறவும் உறுப்பினர் ராஜன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சுமார் 4500 மாணவர் பயிலும் இப்பாரிய பாடசாலை அண்மையில் வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் கிழக்குமாகாணத்தில் தனியொருபாடசாலை அதிகூடிய 87மாணவர்களை சித்தியடைச்செய்த ஒரேயொரு பாடசாலை இது என்பது குறிப்பிட்டுச்சொல்லக்கூடியது.