திருகோணமலை இந்து மாயானப்புனரமைப்பிற்கு காலக்கெடு

பொன்ஆனந்தம்

திருகோணமலை இந்துமயான புனரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கையைதவிர வேறு வழியில்லை என திருகோணமலை நகரசபை தவிசாளர் ந. இராசநாயகம் தெரிவித்தார்
இன்று மாலை ஐந்து மணியளவில் தலைவர் தலமையில் நகரசபை மண்டபத்தில் நடந்த மயான புனரமைப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் இதனை நகரசபை த்தலைவர் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்து மயானத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திக்காமை தொடர்பாக பொது மக்கள் எம்மை கேள்விக்குட்படுத்துகின்றனர். விமர்சனங்களை செய்கின்றனர். சபைஏனைய ய
மயான ங்களை புனரமைத்துள்ளது.
ஆனால் இம்மயானம் இந்து மன்றத்தின் பொறுப்பில் உள்ளது. நகரசபை அதனை புனரமைக்க தயாராகவுள்ளது.
ஆனால்  செயலாளர் விஜய சுந்தரம் அவர்கள் அதற்கு இணங்குவதாக இல்லை. மாறாக பலரும் அவதுதூறாக பேசுவதுடன் நகரசபை எடுக்கப்போகின்றது என தவறான கதைகளை பரப்புகிறார்கள்.
ஆனால் எமக்கிருக்கும் பணிசுமைக்கு மத்தியில் இதனை நாம் எடுக்கப்போவதில்லை. மாறாக மயானத்தை புனரமைக்க வழிவிடவேண்டும்.
அதற்கான சந்தர்பம் வழங்கப்படாதவிடத்து நாம் சட்ட நடவடிக்கைதான் எடுக்க முடியும். எனவே வரும் திங்கள் கிழமை க்குள் இங்கு வந்தவர்கள் பேசி முடிவு க்குவரவேண்டும். அத்துடன் சடலம் அடக்கம்செய்வதற்கான நிதிகளையும் மன்றம் அறவிடக்கூடாது எனவும் தெரிவித்தார். இறுதியில் மன்ற செயலாளருடன்பேசுவதற்கு குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது.
மேலும் இதுபற்றி பேச வும் கூட்டத்தை தொடரம் பொபொலிசார் இடமளிக்காததால் முடிவுக்கு வந்தது. இங்கு 25இற்கும் அதிகமானவர்கள் சுகாதார நடைமுறைகளை ப்பின் பற்றி கலந்து கொண்டனர். பிரதி தவிசாளர் கோகுல்ராஜ் அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.