மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் மாட்டுடன் மோதிவிபத்துக்குள்ளான இராணுவ சிப்பாய் பலி!

23-11-2020
சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் உந்துருளியில் பயணித்த இராணுவ சிப்பாய் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ள 574 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த குறித்த சிப்பாய் நேற்று முந்தினம் (21.11.2020) இரவு உந்துருளியில்  ஒட்டுசுட்டானில் இருந்து  மாங்குளம் நோக்கி  வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

உடனடியாக குறித்த பகுதிவழியாக சென்ற நோயாளர் காவுவண்டி ஊடாக மாங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டு  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டபோது  குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார்

சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய  கலாகம வீதி,புகையிரத நிலைய சந்தி,மதவாச்சியை சேர்ந்த கொள்ளு பத்திரகே சமிந்த கௌஸால் கல்தேரா  என்ற இராணுவ வீரராவார்

இவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது  .விபத்து தொடர்பில் இராணுவ  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.