இரு புதிய அமைச்சுக்கள்.கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி செயலகத்தின் கீழ்

தொழில்நுட்ப அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என புதிய இரண்டு அமைச்சுக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரிக்கின்றது.

இதேவேளை, மேலும் சில அமைச்சுக்களின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கவுள்ளது.

அதேபோன்று, இலங்கை தரநிர்ணய நிறுவனம் மற்றும் ஆட் பதிவு திணைக்களம் ஆகியன தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கிய பொலிஸ் திணைக்களமும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய சிவில் பாதுகாப்பு திணைக்களமும் புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இனி இயங்கவுள்ளது