தமிழ் மக்களை நசுக்கி ஆள நினைத்தாலும் மாவீரர்கள், உறவுகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் அஞ்சலி இடம்பெறும்.

சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.

( வாஸ் கூஞ்ஞ) 

வடக்கு கிழக்கு பகுதி தமிழ் மக்களை நசுக்கி தான் யுத்தத்தின்போது எவ்வாறு தமிழ் மக்களை அச்சுறுத்தி வைத்திருந்தாNhh அவ்வாறு வைத்திருக்கவும் தமிழ் மக்களை தனக்கு எதிராக செயல்படா வண்ணம் வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை சுலபமாக மேற்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றபோதும் எமது மக்கள் மாவீரர் மற்றும் தங்கள் உறவுகளுக்கு ஏதோ ஒர விதத்தில் அஞ்சல் செலுத்துவர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

ஞாயிற்றுக் கிழமை (22.11.2020) வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

2019 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நவம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் கடந்த வருடம் மாவீரர்களின் உறவினர்கள் நண்பர்கள் அவர்களின் துயில் இல்லங்களுக்குச் சென்று மலர் மற்றும் தூப அஞ்சலி செய்யவும் அவர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்தவும் பெரிதளவு தடைசெய்யவில்லை.

அதற்கு ஒரு காரணமாக இதுவும் இருக்கலாம். அச்சமயம் பாராளுமன்ற தேர்தல் இருந்தமையால் தமிழ் மக்களின் செல்வாக்கை பெறும் நோக்காகவும் இருந்திருக்கலாம்.

ஆனால் தற்பொழுது கடந்த மாதம் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகளுக்கும் நீதிமன்ற தடை உத்தரவை எனக்கும் எடுத்திருந்தார்கள். அந்த தடை உத்தரவுக்கு என்னையும் உட்படுத்தியிருந்தனர்.

ஆனால் இப்பொழுது கடந்த போரின்போது உயிர் நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நினைவுகூறப்படும் 27 ந் திகதி (27.11.20200 அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்த இந்த அரசாங்கம் முழுமையான தடையை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஒரு வர்த்தமானி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இன்றிலிருந்து (22.11.2020) பொது மக்களின் முழு பாதுகாப்புக்கும் பொறுப்பு முப்படைகளுக்குமே உரியது என்று.

இதை நான் ஏன் இங்கு கூறுகின்றேன் என்றால் 2019 க்குப் பின் வந்த இந்த அரசாங்கம் தமிழ் மக்களை சுயமாக இயங்கவிடாது அச்சநிலையை உருவாக்கி மாவீரர் தினத்தை நினைவுகூற விடாது இராணுவத்தினர் மூலம் தடுக்கவுமே அவசர அவசரமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதி தமிழ் மக்களை நசுக்கி தான் யுத்தத்தின்போது எவ்வாறு தமிழ் மக்களை அச்சுறுத்தி வைத்திருந்தாNhh அவ்வாறு வைத்திருக்கவும்
தமிழ் மக்களை தனக்கு எதிராக செயல்படா வண்ணம் வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை சுலபமாக மேற்கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இது அமைக்கப்படுகின்றது.

தற்பொழுது கிபுலுஓயா திட்டத்தின் கீழ் வவுனியா, முல்லைத்தீவுப் பகுதிகளில் மகாவலி அதிகார சபையூடாக இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த திட்டத்தில் பத்தாயிரம் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கையாக இது அமைகின்றது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது ஒன்றாகும்.

இவற்றையெல்லாம் நோக்கும்போது இந்த நாட்டில் ஜனநாயகம் முற்று முழுதாக அற்று போகின்றது. தற்பொழுது உள்ள வைரஸ்போல தற்பொழுது இந்த நாட்டில் நாளுக்கு நாள் இராணுவ ஆட்சி மலர்ந்து கொண்டு வருகின்றது.

இராணுவமே அமைச்சுக்களின் செயலாளர்களாகவும் பணிப்பாளர்களாகவும் இத்துடன் மக்களை இராணுவத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனக்குள்ள இப்பொழுது உள்ள கேள்வி இலங்கையில் இந்த நாட்டை இராணுவத்திடம் கையளிக்க என்ன பயங்கரவாதம் இருக்கின்றது?

2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தை ஒழத்து விட்டோம் என சிங்கள மக்களிடம் மார்பு தட்டிச் சொன்ன இந்த அரசு ஏன் இப்பொழுது அவசர அவசரமாக இந்த விடயங்களை செய்ய வேண்டும் என கேட்கின்றேன்.

இந்த அரசின் குறிப்பாக ஜனாதிபதியின் நடவடிக்கையை நான் வண்மையாக கண்டிக்கின்றேன். இராணுவத்தின் பிரசனத்தின் மூலம் தமிழ் மக்களை கட்டுப்படுத்தி வைப்பதற்கு திட்டமிட்ட செயலாகவே இவைகள் அமைகின்றன.

எதுவாக இருந்தாலும் எமது தமிழினத்துக்காக உயிர் நீத்த எமது மாவீரர்களுக்கும் பொது மக்களுக்கும் எமது மக்கள் எதோ ஒரு விதத்தில் அன்றையத் தினம் அஞ்சலி செலுத்துவார்கள் என்பது மட்டும் உண்மை.

அஞ்சலி செலுத்தும் நிகழ்வின்போது என்னை கைது செய்தாலும் நான் கவலை அடைய போவதில்லை. ஆனால் அப்பாவி பொது மக்களுக்கு துன்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் நான் மிக கவனம் செலுத்தி வருகின்றேன்.

இருந்தும் எமது மக்கள் இவ் அஞ்சலியை ஏதோ ஒரு விதத்தில் தங்கள், பிள்ளைகள், உறவுகள் மற்றும் நண்பர்களுக்காக செய்வார்கள் என்பது மட்டும் உண்மையாகும்