AUTO CAD கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(சண்முகம் தவசீலன்)

பெரண்டினா தொழில்வள நிலையம் மற்றும் CHILD FIRST UK ஆகிய நிறுவனங்களின் நிதிப் பங்களிப்புடன் DMI கணினி கல்வி நிலையத்தினால் AUTO CAD  கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு விசுவமடு CFCD திறன் விருத்தி நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

இப்பயிற்சித் திட்டத்திற்கு பெரண்டினா தொழில்வள நிலையத்தினால் 300,000.00 ரூபாயும், CHILD FIRST UK நிறுவனத்தினால் 240,000.00 ரூபாயும் பங்களிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு துரைசிங்கம் ஜெயந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பெரண்டினா தொழில்வள நிலையத்தின் மாவட்ட முகாமையாளர் திரு  செல்வநாயகம் ஸ்டெவின், CFCD  நிறுவனத்தின் உத்தியோகத்தர் திருமதி மிதுலா அவர்களும் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்