கொரோனா தெளிவு

பொன்ஆனந்தம்
மூதூர் பொது ச்சுகாதார வைத்திய அ திகாரி அலுவலகத்திற்குட்பட்ட தோப்பூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலுள்ள உணவு கையாளும் நிறுவன உரிமையாளர்களுக்கு வழிகாட்டல் பயிற்சி இன்று வழங்கப்பட்டது
கொரோனா வைரஸ் சம்பந்தமான உணவுப்பதுகாப்பு நடைமுறைகள் பற்றி யே இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. நிறுவன உரிமையாளர் கள்
 மற்றும் ஊழியர்களுக்கான உணவுச் சுகாதாரம் பேணல் மற்றும் கொரோனா பரவலுடன் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சுகநலக் கல்வி பற்றி தெளிவு படுத்தப்பட்டது.
இந்நிகழ்வு தோப்பூர் வர்த்தக சங்க தலைவர் பரீரின்  வேண்டுகோளுக்கிணங்க தோப்பூர் பொது சுகாதார பரிசோதகர் எம் சாஜாட்டின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி என். எம். எம். கசாலி தலைமையில் இடம்பெற்றது.
சிரேஷ்ட பொது ச்சுகாதார அதிகாரி  முகமட் றசூன் இன் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு  தோப்பூர் உப பிரதேச சபை அலுவலக கட்டிடத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.