கொட்டகலை, டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தை சேர்ந்த ஆணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

(க.கிஷாந்தன்)

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தை சேர்ந்த ஆணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து கடந்த 22 ஆம் திகதி குறித்த நபர் தனது வீட்டுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் இரவு வந்துள்ளார். இதனையடுத்து அவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டார்.

அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் நேற்று (18.11.2020) பெறப்பட்டன.  பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அவரை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையில் பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவருடன் தொடர்பில் இருந்த ஏழு குடும்பங்களை சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.