கிழக்கில் கல்முனை கார்மேல் பற்றிமா சாதனை: 87மாணவர் சித்தி.

(காரைதீவு குறூப் நிருபர் சகா)

கல்முனைப்பிராந்தியத்தில் புகழ்பூத்த பழம்பெரும் பாடசாலையான கல்முனை கார்மேல் பற்றிமா தேசியக்கல்லூரியில் இம்முறை தரம்5புலமைப்பரிசில் பரீட்சையில் 87மாணவர்கள் சித்திபெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில்  தனியொரு பாடசாலை அதிகூடிய சித்திகளைப்பெற்றதென்றால் அது பற்றிமாக்கல்லூரிதான்.

இவ்வருடம் அங்கு 280மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.அவர்களில் 160என்ற அம்பாறைமாவட்ட வெட்டுப்புள்ளிக்குமேல் 87 மாணவர்கள் பெற்றுச்சாதனை படைத்துள்ளனர் என கல்லூரி அதிபர் வண.சகோ.சந்தியாகு செபமாலை தெரிவித்தார்.

அதிகூடிய புள்ளியான 186 என்ற புள்ளியை இப்பாடசாலையில் இருமாணவர்கள் பெற்றுள்ளனர்.அதற்கடுத்ததாக 185 184 என புள்ளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மாணவி ஆனந்தராஜ் அஷ்விதா மற்றும் மாணவன் நௌபல் றிஸ்வான் முகம்மட் நஷாட் ஆகிய இருமாணவர்களே இவ்விதம் அதிகூடிய 186புள்ளிகளைப்பெற்றவர்களாவர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையைப் பொறுத்தவரை கல்வியமைச்சின் சித்திப்புள்ளி 70ஆகும். அந்த 70புள்ளிக்கு மேல் இங்கு 276மாணவர்கள் பெற்றுச்சித்தியடைந்துள்ளனர். அதாவது 99வீதமானன மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.