கல்முனையில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை..

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று(17) பராமரிப்பற்ற வெற்று காணிகள் மற்றும் பூட்டப்பட்டு கிடைக்கின்ற இடங்களை குறிவைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கல்முனை சுகாதார பிரிவினரும் கல்முனை பொலிஸ் நிலையமும் இணைந்து கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னியின் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனேகமான வெற்றிக்காணி சொந்தக்காரர்களுக்கு முன்னெச்சரிக்கையும் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வருகின்ற மாரி காலம் என்பதால் இனிவரும் காலங்களிலும் தீவிரமான டெங்கு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் தத்தமது இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகா வண்ணம் சுத்தமாக வைத்திருப்பது தங்கள் மீது திணிக்கப்பட்ட கட்டாயக் கடமையாகும்.

மீறுவோருக்கு எதிராக பக்க சார்பின்றி உடனடியாக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ ரிஸ்னி தெரிவித்தார்.