பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பியாக பசிலைநியமிக்க கோரி கையெழுத்து வேட்டை

பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பியாக பசிலை
நியமிக்க கோரி  கையெழுத்து வேட்டை
– நாட்டை காக்கும் இளைஞர் அணி நடவடிக்கை
  (ஏ.எல்.எம்.ஷினாஸ்)   

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பியாக பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை நியமிக்க வேண்டும் என்று கோரி நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கிழக்கு மாகாண தலைமையால் சூறாவளீ கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கிழக்கு மாகாண தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாமின் வழி நடத்தலுக்கு அமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் பிரதேசங்களில் இடம்பெறுகின்றது.
இதன்படி பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை போன்ற பிரதேசங்களில் இளையோர்கள்,, பெரியோர்கள் பேரார்வத்துடன் கையெழுத்துகளை இடுகின்றமையை காண முடிகின்றது.
நிசாம் இது குறித்து ஊடகங்களுக்கு நேற்று திங்கட்கிழமை கருத்து கூறுகையில் பசில் ராஜபக்ஸ நாட்டின் தேசிய சொத்து ஆவார், இவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி காலத்தில் சகல துறைகளிலும் பாரிய முன்னேற்றங்களை கண்டு வந்திருக்கின்றது, எனவே ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ இவரை தேசிய பட்டியல் எம்.பியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இவர் மேலும் கூறுகையில் நடக்கவுள்ள புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது துறை சார்ந்த நிபுணர்களான வியத்மகே அமைப்பு சார்ந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதலான முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும், இதன் மூலமாக ஜனாதிபதியின் வேலை திட்டங்களை மக்களின் காலடிக்கு கொண்டு வருவது இலகுவாக இருக்கும் என்றார்.