அக்கரைப்பற்று முதல்வர் சக்கியின் கவனத்திற்கு

பைஷல் இஸ்மாயில் –
அக்கரைப்பற்று -16 மத்திய வீதியில் அண்மையில் அமைக்கப்பட்ட வடிகான் மீது இடப்பட்ட இரும்புக் கம்பியின் அவல நிலையைப் பார்த்து அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்று மாநகரசபை இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வியையும் அப்பிரதேச மக்கள் கேட்கின்றனர்.
தற்போது மழை பெய்து வருகிற இக்கால  நிலையை கவனத்திற் கொண்டும், இதனால் ஏற்பட்டக் கூடிய பாரிய ஆபத்திலிருந்தும் மக்களைப் பாதுகாக்கவும் இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வினை மாநகர முதல்வர் அதாஉல்லா சக்தி மற்றும் இது தொடர்பான உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என்றும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.