மட்டக்களப்பில் மேலும் ஒரு கொரனா தொற்று மொத்தம் 76

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் ஒரு கொரனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏறாவூர் சுகாதாரப்பிரிவிலேயே இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாணப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட நபர் கொழும்பு மட்டக்களப்புக்கிடையில் பொருட்களை ஏற்றியிறக்கின்ற வாகனத்தின் சாரதியாக பணியாற்றுகின்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட நபருக்கு எவேச்சையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நிலவரப்படி மட்டக்களப்பில் 76பேரும் கிழக்கு மாகாணத்தில் 120 பேரும்  தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதில் பலபேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.