தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி  செலுத்தி சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி சிரமதானப்பணிகள்

சண்முகம் தவசீலன்

தேராவில் மாவீரர் துயிலும்  இல்ல பணிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள் இணைந்து  தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்று அங்கே வீரர்களுக்கு அஞ்சலி  செலுத்தி சுடரேற்றி மலரஞ்சலி  செலுத்தியதை தொடர்ந்து சிரமதானப் பணிகளை முன்னெடுத்து இருந்தனர்

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த தர்மபுரம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இராணுவப் புலனாய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த குழுவினரை அழைத்து சிரமதான பணிகளை முன்னெடுத்தவர்களிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்

குறித்த இடத்தில் சிரமதானப் பணிகளை செய்வதற்கு உரிய பிரதேச சபையின் உடைய அனுமதியை பெற்று சுகாதார நடைமுறைகளுக்கு  அமைய குறித்த சிரமதானப் பணிகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததாக பணிக் குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்

அத்தோடு பணிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் வழமைபோன்று இம்முறையும் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பேணி  கைகளை கழுவி அந்த நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்  மக்களை சுகாதார நடைமுறைகளை பேணி  வருகைதந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வருகை தருமாறு பணிக்குழுவினர் மேலும் அழைப்பு விடுக்கின்றனர்