தாந்தாமலைப்பகுதியில் 40பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலைப்பகுதியில் உள்ள மக்களடியூற்று பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் சனிக்கிழமை(14) இனங்காணப்பட்டதனைத் தொடர்ந்து இன்று(15) ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் 10குடும்பங்களை சேர்ந்த 40பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இனங்காணப்பட்ட குறித்த கொரோனா தொற்றாளர் சிகிச்சைக்காக காவுவண்டி மூலம் இன்று(15) ஞாயிற்றுக்கிழமை சுகாதார வைத்திய அதிகாரி உள்;ளிட்ட உத்தியோகத்தர்கள், காவல்துறைனரின் ஒத்துழைப்போடு அழைத்துச் செல்லப்பட்டார்.

இவர் கடந்த 26ம்திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்தவர் எனவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போது இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.