சிறைகளில் 400யை தாண்டிய கொரனா தொற்றாளர்கள்.சிறை அதிகாரிகளின்  விடுமுறைகளும் ரத்து

மறுஅறிவித்தல் வரும் வரை அனைத்து சிறை அதிகாரிகளின்  விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிருவாகத்துக்குப்பொறுப்பான சிறைச்சாலை ஆணையாளர்சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

அனைத்து அதிகாரிகளும் நாளை காலை 8.00 மணிக்கு முன்னர் தங்கள் பணியிடத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்  என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சிறைகளில் பதிவான கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 400யை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.