தாந்தாமலையிலும் ஒருவருக்கு கொரனா தொற்று

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாந்தாமலைப்பிரதேசத்த்தில் ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
இவர் கடந்த 26ம்திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குவந்தவர் எனவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றுடன் கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 119 எனவும்,மட்டக்களப்பில் எண்ணிக்கை 75 எனவும் என தெரிவிக்கப்படுகின்றது.