ஆலயங்களில் இடம்பெறும் தீபாவளி பூசை வழிபாடுகளில் ஒன்று கூடாதீர்கள் – யாழ் அரச அதிபர் க.மகேசன்

யாழ். அரச அதிபர் ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூடாதீர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்

தீபாவளி தினமாகிய  இன்றைய தினம் மக்கள் ஆலயங்களில் ஒன்றுகூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கமகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்துக்களின் பண்டிகையாகிய தீபாவளி பண்டிகை  இன்றைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும் அத்துடன் தற்போது இந்து கோவில்களில் விரத பூசைகளும் இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாது ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி இறைவனைப் பிரார்த்திக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார் .