மட்டு.மாவட்டத்தில் கடும் மழை—இரு மணிநேரத்தில் 14 மில்லி மீற்றர் மழை பதிவு-

ரீ.எல்.ஜவ்பர்கான்–
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவ மழை பெய்ய  ஆரம்பமாகியுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை இருமணிநேரத்தில் 14மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.காலை 7மணிமுதல் 9 மணிமணிவரையான காலப்பகுதியில் கடுமையான அடைமழை பெய்தது.
இம்மாதம்  முதலாம் திகதி முதல் கடந்த 11 நாட்களில் 175.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவத்துள்ளது.
தொடர்மழை காரணமாக பள்ளமான பிரதேசங்களில் நீர்தேங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
கிழக்கில் நவம்பர் டிசம்பர் மாதங்கள் பருவமழை காலம் என்பது குறிப்பிடத்தக்கது