ஏறாவூர் நகரசபை பிரதேச முக்கிய பிரச்சினைகள் பற்றி நகர சபை தவிசாளருடன் சாணக்கியன் கலந்துரையாடல்

திலக்ஸ் ரெட்ணம்

மட்டக்களப்பு ஏறாவூர்  நகரசபைக்குட்பட்ட மக்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைபாடுகள் தொடர்பாகவும் ஏறாவூரில் நேற்று (11) கலந்துரையாடப்பட்டது.
 இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறூப்பினர் இரா.சாணக்கியன், ஏறாவூர்ப்பற்று நகரசபை தவிசாளர் மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான நடேசசபை சுதாகரன் மற்றும் சுதா, ஏறாவூர் 4 மற்றும் ஏறாவூர் 5 ஆலய பரிபாலன சபையினர் உட்பட மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
 வருகின்ற உள்ளுராட்சி சபை வரவு செலவு திட்டம் தொடர்பாகவும்,  பல வருட காலமாக பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கும் ஏறாவூர் 04 புகையிலை சங்க காணி தொடர்பாகவும் மற்றும் ஏறாவூர் 05 வடிகான் பிரச்சினை தொடர்பாகவும் இடம்பெற்றது.  இதன் போது சம்பவ இடத்துக்கு ஏறாவூர் நகரசபை தவிசாளர் அப்துல் வாஜித்தை அழைத்து குறைநிறைகளை நேரடியாக கலந்துரையாடப்பட்டது எதிர்காலத்தில் இப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.