இலங்கையில் கொரனா தொற்று இறப்பு 44

3D illustration design digital representation in red and white background

இலங்கையில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை இன்று மாலை 44 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் பலியானவர்கள் கொழும்பு 11 ஐச் சேர்ந்த 40 வயதுடையவரும், களனியாவைச் சேர்ந்த 45 வயதுடையவரும் ஆவார்.

கொழும்பு 11 ஐச் சேர்ந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதன் விளைவாக மாரடைப்பு காரணமாக அந்த நபர் இறந்துவிட்டார் என்று பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.