மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பு மையம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பு மையம் மாவட்ட செயலகத்தில் இன்று (9) உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது மாவட்டத்து மக்களுக்கான தேவையினை 24 மணித்தியாலமும் வழங்கும் நிலையமாக செயற்படும்.

231ஆம் இராணுவ படைப்பிரிவின் அதிகாரி கேணல் எஸ்.பீ.ஐி.கமகே மேலதிக அரசாங்க அதிபர். சுதர்சினி ஸ்ரீகாந்த் போதனாவைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் என்.மயூரன் கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட வைத்திய சௌக்கிய பராமரிப்பு விரிவுரையாளர் சுந்தரேசன் ஆகியோர் கலந்தகொண்டனர்.

இந்நிலையத்தில் மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஒருவர், சுகாதார திணைக்கள பிரிவினர், அதேபோல் இலங்கை பொலிஸ், இராணுவ  பிரிவினர் என நான்கு குழுக்களும் 24 மணித்தியாலமும் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

மாவட்டத்தின் எல்லைகளில் 06 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதனுடாக வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற நபர்கள் தொடர்பான முழு விபரங்களும் சேகரிக்கப்பட்டு இந் நிலையத்தினுடாக கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் ஒருங்கிணைப்பு மையமாக செயற்படும்.

கொரோணா தொற்றாளர்களினதும், தனிமை படுத்தப்படுபவர்களினதும் விபரங்களை உடனுக்குடன் சேகரிக்கப்படும் தகவல் மையமாகவும் செயற்படும். மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்குகின்ற தகவல் மையமாகவும், தனிமைப் படுத்தப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற வசதிகளையும் வழங்குகின்ற மையமாகவும் செயற்படும்.

அவசியமான சந்தர்ப்பங்களில் மக்களின் வினைத்திறனான தேவையினை வழங்க மக்கள் இத்தொலைபேசி இலக்கத்துடன் (065 2226874) தொடர்பு கொள்ள முடியும்

இதைத்தவிர மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான விபரங்களையும் ஆலோசணைகளையும்  பெற்றுக்கொள் கிழ்குறிப்பிடும் இலக்கங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.
076 1488028 076 1488023 076 6488606 075 6836346 077 3237606