கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம்

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்று(08) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெற்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா தொற்று நீங்கவும், மக்கள் துன்ப துயரங்கள், நோய்கள் இன்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு ஆசிவேண்டி இவ்யாகம் நடாத்தப்பட்டது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில், ஹோம கிரியைகள் ஆரம்பமாகின. மந்;திரங்கள் உச்சாடனம் செயற்பட்டு அக்கினியில் ஆகுதிகள் சொரியப்பட்டன.

புத்தசாசன சமய விவகார கலாசார அலுவல்கள் அமைச்சின் வேண்டுகோளுக்கமைய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலய பரிபாலனசபையின் ஆதரவோடு நடைபெற்ற யாக பூசையில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் குணநாதன், ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர்கள், ஊடகவியலாளர்கள் என  மிகவும் குறைந்தளவிலானவர்களைக் கொண்டு சுகாதார முறைகளைப் பின்பற்றி இவ்யாக பூசை இடம்பெற்றது.