சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி முருகன் ஆலயத்தில் விசேட யாகபூசை வழிபாடு

(ஏறாவூர் நிருபர்- நாஸர்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டிக்கொண்டதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் வரலாற்றுத்தொன்மைமிக்க மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி முருகன் ஆலயத்தில் விசேட யாகபூசை வழிபாடு மற்றும் பிரார்த்தனையும் 08.11.2020 நடைபெற்ற ன .

இப்பூசை வழிபாட்டில் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி HWK. ஜயந்த உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சமீபகாலமாக உலக மக்களைப் பீடித்து இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டுள்ள கொரோனா நோயிலிருந்து மக்களைப்பாதுகாக்க வேண்டி இங்கு பிரார்த்திக்கப்பட்டது.