திருகோணமலை இந்து மயான அபிவிருத்தியில் நிலவும் தடைகளை நீக்குவது தொடர்பான கலந்துரையாடல் பயனளிக்கவில்லை

பொன்ஆனந்தம்

திருகோணமலை இந்து மயான அபிவிருத்தியில் நிலவும் தடைகளை நீக்குவது தொடர்பான கலந்துரையாடல்  பயனளிக்கவில்லை என நகரசபைத்தவிசாளர் ந. இராசநாயகம் தெரிவித்தார்

நேற்றையதினம் சனிக்கிழமை கலை 10.00மணியளவில் திருகோணமலை பொலிஸ்நிலயப்பொறுப்பதிகாரி தலமையில் இந்து மயானத்தை அபிவிருத்தி செய்வதில் உள்ள சிக்கல்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
குறித்த மயானத்தை நகரில் வாழும் பல்லாயிரக்கணக்கான இந்து மக்கள் பயன்படுத்திவருகின்றனர்
ஆயினும் இதனை முறையாக பராமரிப்பதில்லை  என்ற  குற்றச்சாட்டை பொதுமக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.
இது பற்றி அண்மையில் ஊடகங்கள் மூலம் நகரசபையின் தலைவர் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் நகரசபையின் பராமரிப்பில் இந்த மயானம் இல்லாமல் இந்து இளைஞர் மன்றத்தின் பொறுப்பில் உள்ளமை யால் நகரசபையினனால் அபிவிருத்தி செய்யமுடியாதுள்ளது
இருப்பினும் இதனை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இணைந்து செயலாற்றவருமாறு பலமுறை எழுத்துமூலமாக இந்து மன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை விடப்பட்டது என தலைவர் தெரிவித்தார்.
ஆயினும் மாதங்கள்பல கடந்தபோதும் பொதுமக்களின் குற்றச்சாட்டு நகரசபைமீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தவதுடன்  என்மீது அவதூறும் செய்யப்பட்டது.
இந்நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது என்னுடன் உப தவிசாளர் கோகுலராஜ் அவர்களும் கலந்து கொண்ட நிலையில் தற்போதுள்ள இந்து மன்றம் இப்பணிக்கு ஒத்துழைக்க முன்வரவில்லை.
குறிப்பாக செயலாளர் விஜயசுந்தரம் இதற்கு முட்டுக்கட்டையாகவுள்ளார். இந்நிலையில் இப்பிரச்சனையை சட்டரீதியாக நீதிமன்றம் சென்று தீர்வுகாணுமாறு பொலிசார் பணித்ததனால் மயானத்தை அபிவிருத்தி செய்ய அனுமதியை பெற நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்
இதற்காக நடைபெற்ற கலந்துரையாடல் பனளிக்காமை துரதிஸ்ரமானது எனவும் அவர் தெரிவித்தார். மயானத்தை அபிவிருத்தி செய்ய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.