மட்டக்களப்பில் மேலும் 06பேருக்கு கொரனா தொற்று மொத்தம் 67.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கிய 218 உறவுகளுக்கு  மேற்கொள்ளப்பட்ட  பி.சி.ஆர். பரிசோதனைகளில் 06 பேருக்கு தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்தார். இதனையடுத்து மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67 என தெரிவிக்கப்படுகின்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரையில் 48 நபருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்குமாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மொத்தம் 49 நபர்களுக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு சுகாதாரப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட 23 பி.சீ.ஆர் பரிசோதனைகள், ஏறாவூர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட 12 பீ.சீ.ஆர்  பரிசோதனைகள் அனைத்தும் எதிர்மறையாக(Negative) காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.