கொரனா தொற்றிலிருந்து விடுபட ஆசி வேண்டி பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பிரார்த்தனை.

கொரனா தொற்றிலிருந்து அனைத்து மக்களும் விடுபட ஆசி வேண்டி பிரார்த்தித்து வழிபட்ட நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் கௌரவ பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்ச அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் படி மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக சர்வசித்தி விநாயகர் ஆலயத்தில் இன்றைய(8) தினம் மாலை 5 மணி தொடக்கம் 6மணி வரையான காலப்பகுதியில் கொரனா தொற்றிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாத்து அருளுமாறு வேண்டி கிரியை, விசேட பூசை இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரவீந்திர சர்மாவினால் நடாத்தப்பட்ட கிரியை, வழிபாட்டு நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி மேனகா புவிக்குமார், கணக்காளர் ம.முகிலன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.