மட்டக்களப்பில் மேலும் 4பேருக்கு கொரனா தொற்று மொத்தம் 54

3D illustration design digital representation in red and white background

ந.குகதர்சன்

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் நேற்று 05.11.2020ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின்படி வாழைச்சேனை 206D கிராம சேவகர் பிரிவில் நான்கு பேருகக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபருடன் நெருங்கிப் பழகியவர்கள் என்ற சந்தேகத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.