ஏறாவூரில் முதலாவது தொற்று.பொதுச்சந்தையும் மூடப்பட்டது.

(ஏறாவூர் நிருபர் எம்ஜிஏ நாஸர்)
மட்டக்களப்பு-ஏறாவூர்ப் பிரதேசத்தில்                            முதலாவது கொரோனா நோய்த்தொற்று நபர்                        இன்று 05.11.2020 அடையாளங்காணப்பட்டுள்ளார்.

இவர் மீன்வியாபாரி என அறியவந்துள்ளது..

இதையடுத்து உடனடியாக பொதுச்சந்தை மூடப்பட்டதுடன்                  சந்தை வர்த்தகர்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக                  அடையாளங் காணப்பட்ட நபர்                             ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும்                     வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்படும் மீன்களை விற்பனை செய்தவரெனவும் தெரியவந்துள்ளது.
எனினும் இவர் கடந்த நாட்களில்  பீசீஆர் பரிசோதனைக்காக  முன்வராதபோதிலும் அண்மையில் பொதுஅடிப்படையில்             பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.                 பரிசோதனை முடிவு இன்று காலை வெளியிடப்பட்டபோது               வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இவரது குடும்ப உறவினர்கள் மற்றும் இவருடன் சம்பந்தப்பட்ட நபர்களையும் தனிமைப்படுத்தல் செய்யும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
ஏறாவூர்ப் பொதுச்சந்தையின் நடவடிக்கைகள்  வழமைபோன்று ஆரம்பமானபோதிலும் மீன் வியாபாரிக்கு கொரோனா தொற்று          உறுதி செய்யப்பட்டதையடுத்து நகர சபை முதல்வர்                        ஐ. அப்துல் வாசித் தலைமையில் சந்தை வர்த்தகர்கள் அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டனர்.
இதன்போது பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
பொதுச்சந்தை மூடப்பட்டயைடுத்து சந்தைப்பொருட்களை             வியாபாரம் செய்யும் நடவடிக்கைகள் சுகாதார விதிமுறைக்களுக்கமைவாக ஒழுங்குபடுத்தப்பட்டன.
        அங்காடி வியாபரத்தில் ஈடுபடுமாறு வர்த்தகர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.