இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குள்ளும் கொரனா

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூன்று ஓட்டுநர்கள் மற்றும் ஒரு ஜெனரேட்டர் ஆபரேட்டர் கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் போக்குவரத்துப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும், ஓட்டுநர்களுடன் நிறுவனத்திற்கு வந்த செய்திப் பிரிவின் பல உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.