கண்டி திருமலை வீதியில் LED மின் விளக்குகள் பொறுத்தி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில் ஒரு தொகை வீதி LED மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன.
பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் குறித்த LED மின் விளக்குகளானது இன்று (04) திருகோணமலை கண்டி பிரதான வீதியில் முள்ளிப் பொத்தானை சந்தி உள்ளிட்ட பிரதான வீதியில் பொறுத்தப்பட்டன.
இதனால் இருள் சூழ்ந்த பகுதிகள் மிகவும் வெளிச்சமூட்டப்பட்டுள்ளது.