காணி உத்தியோகத்தராக ரமேஸ் பதவியுயர்வு!

(காரைதீவு  நிருபர் சகா)


காரைதீவு பிரதேச செயலகத்தில் குடியேற்ற உத்தியோகத்தராகக் கடமையாற்றும் இராஜநாயகம் ரமேஷ் காணி உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இவருக்கான இந்நியமனத்தை  வர்த்தமானிமூலம் காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சி.எம்.ஹேரத் பிரனகடனப்படுத்தியுள்ளார்.

காணி அபிவிருத்திக்கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் அவரது கடமைக்கு மேலதிகமாக இப்பதவியும் உரி;த்தாக்கப்பட்டுள்ளது.

இவர் ஏலவே நாவிதன்வெளி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலகங்களில் சேவையாற்றியவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் காரைதீவைச்சேர்ந்த காலஞ்சென்ற ஓய்வுநிலை மட்டு.மாவட்ட  விவசாயப்பணிப்பாளர் வே.இராஜநாயகம் கமலாதேவி தம்பதியினரின் கனிஸ்ட புதல்வராவார்.