கிழக்கில் கொரனா தொற்று மட்டுமாவட்டத்தில் 41பேர்.3666பேர் தனிமைப்படுத்தலில் 1103பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள்.

(வேதாந்தி)

கிழக்கு மாகாணத்தில் கடந்த மார்ச்மாதம் தொடக்கம் இற்றைவரை 102பேர் கொரனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், முதலாவது அலையில் 15பேரும், கந்தக்காடு 5, மினுவாங்கொட 4, பெலியகொட 78 பேர் என இனம் காணப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள்  திணைக்களத்தினால் நேற்று இரவு 10மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாத்திரம் கிழக்குமாகாணத்தில் 5 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன் இதில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தொற்றாளர்கள் காத்தான்குடி,  தமண, தெகியத்தகண்டி, இறக்காமம், அம்பாறை ஆகிய சுகாதாரபிரிவுகளிலேயே இனம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி இரண்டாவது அலையில் கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி மட்டக்களப்பு 41, கல்முனை 18, திருகோணமலை 13,

அம்பாறை 6 என மொத்தம் 78 பேர் இரண்டாவது அலையில் இனம் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில்  மாகாண சுகாதாரதிணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் 5 கொரனா தொற்று சிசிச்சை நிலையங்களில் இதுவரை 618 தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு 143பேர் சிகிச்சை பெற்று நிலையங்களைவிட்டு வெளியேறியதுடன் இருவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 473பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் காத்தான்குடி 136, ஈச்சலம்பற்றை 80, கரடியனாறு 107, பதியத்தலாவ 69, பாலமுனை 81 என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட மாகாணத்தில்5276 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 2264 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் ஆகக்கூடுதலாக மட்டக்களப்பு மாவட்டத்திர் 3666 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 1103 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.