கிளிநொச்சியிலும் கொரனா தொற்று.

இலங்கையில் கோவிட் நோயாளிகள் இதுவரை பதிவாகாத ஒரே மாவட்டமாக இருந்த கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு கோவிட் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொற்றுக்குள்ளானவர் கிளிநொச்சியின் கண்டாவலையில் உள்ள தர்மபுரம் பகுதியில்  வசிப்பவர்  இவர் கொழும்பில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றியவர். உணவகம் மூடப்பட்ட பின்னர் அவர் கிளிநொச்சிக்கு திரும்பியுள்ளார்

முதல் பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது, நேற்று இரவு (2) இரண்டாவது பி.சி.ஆர் சோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.