திருமலையில் விமானப்படைவீரர் உயிரிழப்பு.

திருகோணமலையில் உள்ள சீனா பே விமானப்படை தளத்தில் பணியாற்றி வந்த ஒரு சிப்பாய் மூன்று மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு (02) இந்த விபத்து நடந்ததாக விமானப்படை ஊடக செய்தித் தொடர்பாளர் குறூப் கேப்டன் துஷன் விஜேசிங்க தெரிவித்தார்.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்று துஷன் விஜேசிங்க குறிப்பிட்டார்.

சீன துறைமுக காவல்துறையும் விமானப்படையும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன