அம்பாறை – மட்டு எல்லையில் கொரோனா இராணுவசோதனைச்சாவடி!

(காரைதீவு நிருபர் சகா)

ஜனாதிபதி கொவிட்செயலணிக்குழுவின் தீர்மானத்திற்கமைவாக மாவட்டங்களுக்கிடையில் அநாவசிய போக்குவரத்துகளைக் குறைக்க எல்லைகளில் இராணுவச்சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் அம்பாறை – மட்டக்களப்பு எல்லையில் பெரியநீலாவணைப்பகுதியில் நேற்று (2)திங்கட்கிழமை இராணுவச்சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று இராணுவத்தினர்அவ்வழியால் செல்வோரிடம் பரீட்சார்த்தமாக விசாரித்து அனுமதித்தனர். பதிவுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் ஓரிருதினங்களில் கெகாரோனாவின் முதலாவது அலையின்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இயங்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


அந்தஇடத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கும் அவசிய பயணங்களுக்கும்  வழிவிட்டு அநாவசியமான பயணங்களைக்கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகவுள்ளது. மேலும் மாவட்டங்களுக்கிடையில் பயணிப்போரின் பூரணவிபரங்கள் பதியவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பதிவு சோதனையின்படியே இடம்பெறும் எனக்கூறப்படுகிறது.