இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 22 வது மரணம் பதிவாகியுள்ளது

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 22 வது மரணம் பதிவாகியுள்ளது

பாணந்துறை பகுதியில் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகவும், பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணரத்ன தெரிவித்தார்.

உயிரிழந்தவர்  பாணந்துறையில் வசிக்கும் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.