முன்னாள் அமைச்சர் ராஜித கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 வேதாந்தி

முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்தினவும் அவரது குடும்பத்தினரும் பொத்துவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்திலிருந்து சுற்றுலா நிமித்தம்  கிழக்கிற்கு வந்த இவர்கள் பொத்துவிலில் உள்ள  தங்குவிடுதியில் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பிரதசுகாதாரப்பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறிப்பிட்ட இடத்துக்குச்சென்ற சுகாதாரப்பிரிவினர்  தங்குவிடுதியையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட விடுதியில் 40 அறைகளில் விருநடதினர்கள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.